முத்துப்பேட்டையில் நடைபெற்று வரும் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் பல்வேறு தலைவர்கள் கலந்துகொண்டு கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.

அதன்படி முத்துப்பேட்டையில் நடைபெற்று வரும் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் பல்வேறு தலைவர்கள் கலந்துகொண்டு கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.


அதன்படி ஞாயிற்று கிழமை மாலை தென்காசி சட்டமன்ற உறுப்பினரும், இந்திய யூனியன் முஸ்லிம்லீக் கட்சியின் மாநில —- செயலாளருமான அபூபக்கர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார், அப்போது விரைவில் கூட்ட உள்ள சட்டமன்ற கூட்டத்தொடரில் NPR சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற நாங்கள் கோரிக்கை வைத்துள்ளதாகவும், அதனை நிறைவேற்றாமல் உதாசீனம் செய்தால் இப்போராட்டங்களானது தீவிரமடையுமே தவிர ஒரு போதும் ஓய்ந்து விடாது என்றாரஅரசுமேலும் பேசிய அபூபக்கர், மத்தியில் ஆளும் பாஜகவினர் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளதை பற்றி சிந்திக்காமல், அரசு நிறுவனங்கள் எல்லாம் தனியாருக்கு தாரை வார்ப்பதை விடுத்து மக்கள் நலனில் அக்கரை செலுத்துவதை விடுத்து மத அடிப்படையினால் மக்களை பிளவுப்படுத்தும் போக்கை மத்திய பாஜக அரசு நிறுத்தி கொள்ள வேண்டும் என்றார்.


நாடெங்கிலும் வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது இதனை பற்றி கவலைப்படாத மோடி அரசு கவலைப்படுவதாக இல்லை என்று சாடிய அவர்,நீதித்துறையே காவித்துறையாக மாறியுள்ளது அதனால்தான் நீதமாக செயல்படும் நீதிபதிகளுக்கு பணியிட மாற்றம் போன்ற கொடுரங்களை அரங்கேற்றி வருகிறது.